January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடிவரவு – குடியகல்வு திணைக்களம் செல்வோர் முன்பதிவு செய்ய வேண்டும்

இலங்கையில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சேவையை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு முன்னதாக, www.immigration.gov.lk ஊடாக அதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாக முன்பதிவு இன்றி வருகை தரும் நபர்கள் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.