இலங்கையில் ஒரு கிலோ கிராம் சீனியை 98 ரூபாய்க்கு வழங்க முடியும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரனவக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சீனியின் விலையோடு ஒப்பிடும் போது, இலங்கையில் நுகர்வோருக்கு 98 ரூபாய்க்கு வழங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கிலோ கிராம் சீனியை 92 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கும் நிலையில், 220 ரூபாய்க்கு விற்பனை செய்வது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று சம்பிக ரனவக கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யாமல் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வந்தால், வியாபாரிகளிடம் அமைச்சர் இலஞ்சம் பெறுவதாக சந்தேகிக்க வேண்டி வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் பெறுவதால், வருடமொன்றுக்கு சீனி வியாபாரிகள் 70 பில்லியன் அளவில் இலாபம் பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.