January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸார் போன்று நடித்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கும்பல் மடக்கி பிடிப்பு!

ஊரடங்கு காலத்தில் பொலிஸார் போன்று நடித்து நடமாடும் விற்பனையாளர்களின் மோட்டார் சைக்கிள்களை  திருடி வந்த கும்பல் ஒன்றை சிறப்பு அதிரடிப்படை மடக்கி பிடித்துள்ளது.

கடவத்த பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்லவில் வசிக்கும் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தேக நபர்கள் தம்மை பொலிஸாராக காட்டிக் கொண்டு பல மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.