
நாட்டில் இதுவரையில் 6,000 சுகாதார பணிக்குழாமினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுயாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில் கண்டி மருத்துவமனையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.