February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொவிட் தொற்று உறுதி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரட்ணவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இதனால் கடந்த தினங்களில் தன்னுடன் தொடர்புகளை பேணியவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் பந்துல குணவர்தனவின் மனைவிக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பந்துல குணவர்தனவுக்கு தொற்று உறுதியான நிலையில், அதனை தொடர்ந்து அவரின் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பந்துல குணவர்தனவின் மனைவி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.