January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர் நீதிமன்றத்தில் அத்தியாவசிய விடயங்களை மாத்திரம் விசாரணைக்கு எடுக்கும் காலம் நீடிக்கப்பட்டது

இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அத்தியாவசிய விடயங்களை மாத்திரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக குறித்த காலம் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற செயலாளர் பிரதீப் மஹமுதுகல தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் அத்தியாவசிய விடயங்களை மாத்திரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் அறிவித்த பின்னர், விசாரணைக்கு எடுக்குக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விடயங்கள் காலை 11 மணி முதல் ஆரம்பமாகும் என்றும் அனைத்து சட்டத்தரணிகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி, வருகை தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.