June 14, 2025 15:41:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் இருந்து மேலும் ஒருதொகை பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் தொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.

அதன்படி, ஒரு இலட்சத்து 24 ஆயிரம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவை பாதுகாப்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஏற்கனவே இலங்கைக்கு 7 இலட்சம் வரையான பைவர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
இந்த தடுப்பூசி புத்தளம் உள்ளிட்ட சில மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பைசர் தடுப்பூசிகளை வழங்கும் பொறுப்பு நேற்று முதல் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.