
2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதேவேளை இந்தப் போட்டியில் 67.79 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனையையும் புரிந்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் 16 ஆவது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர்.
இலங்கை சார்பாக 9 வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
அவர்களில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட தினேஸ் பிரியந்த ஹேரத், உலக சாதனையுடன் இலங்கை சார்பாக முதற்தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.