January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: ‘தெரண’ தொலைக்காட்சியின் யூடியூப் தளம் மீட்டெடுக்கப்பட்டது!

Update:

தெரண தொலைக்காட்சியின் “TV Derana YouTube” தளம் மீட்டெடுக்கப்பட்டதாக தெரண நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூப் தளத்தை ஏற்கனவே இருந்த வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்களுடன் மீட்க முடியுமானதாகவும் தெரண தெரிவித்தள்ளது.

Update: Aug 29, 2021- 17:28

தெரண தொலைக்காட்சியின் “TV Derana YouTube” தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் திலித் ஜயவீர தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பில் “TV Derana YouTube” தளம் தமது கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவித்துள்ள அவர், கூடிய விரைவில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை நிறுவனத்தின் குழுவினர் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

3 மில்லியன் “subscribers” களை தெரண  யூடியூப் தளம் கொண்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்டுள்ள அந்தத் தளத்தில் இலச்சினை மாற்றப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.