January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 6 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்

இன்று காலை 7.45 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் மட்டக்குளி, புளூமென்டல், கிரேண்ட்பாஸ், மோதரை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மாலை 6 மணி முதல் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்திற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையிலேயே இந்தப் பிரதேசங்களில் ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நேற்று இரவு 10 முதல் கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று மாலை 6 மணி முதல் களுத்துறை மாவட்டத்தில் கொரகொட, பேரகம, தப்பிலிகொட, கெக்குலந்த மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.