May 25, 2025 22:24:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தனியார் துறை ஊழியருக்கான ஆகக் குறைந்த சம்பள அதிகரிப்பு வெளியானது

இலங்கையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக் குறைந்த மாத சம்பளமாக 16 ஆயிரம் ரூபாவும் ஆகக் குறைந்த நாள் சம்பளமான 640 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட தேசிய குறைந்தளவான சம்பளத்துடன், 2015 மற்றும் 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிவாரண தொகையும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்த மாத சம்பளமாக 16,000 ரூபாவும், ஆகக் குறைந்த நாள் சம்பளமாக 640 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.