தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்த அறிவிப்புகளை வரவேற்று
அமைச்சர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அமைச்சரின் அந்த பதிவுக்கு பதில் பதிவொன்றை பதிவிட்டுள்ள மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு மனோ கணேசன், நாமல் ராஜபக்ஸவிடம் டுவிட்டர் பதிவின் ஊடாக பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு போக விடுங்கள். @RajapaksaNamal @mkstalin https://t.co/SPYYWzTiPp
— Mano Ganesan (@ManoGanesan) August 29, 2021