July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க ஐக்கிய அரபு இராச்சியம் முடிவு!

முழுமையாக கொவிட் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விசா வழங்கும் நடவடிக்கைகளை திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக தாமதமான துபாயில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020 வர்த்தக கண்காட்சிக்கு இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகளையும் தமது நாட்டுக்குள் அனுமதிப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் முடிவு கொவிட் தொற்றுக்கு பின்னான “நிலையான மீட்புக்காக” ஒரு முக்கிய கட்டமாக உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட  ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனிகா, மொடர்னா மற்றும் ஜொன்சன் அன்ட் ஜொன்சன், பைசர்/பயோ என்டெக், சினோபார்ம் மற்றும் சினோவாக் ஆகியவற்றில் ஏதாவது கொவிட் -19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த வாரத்தில் தினசரி தொற்று 1,000 க்கும் குறைவாக பதிவாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் “சுற்றுலா விசாவில் வரும் பயணிகள் விமான நிலையத்தில் கட்டாய PCR சோதனை செய்து கொள்ள வேண்டும்,” என்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதுவரை 715,000 க்கும் மேற்பட்ட கொவிட் -19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதோடு, 2,036 இறப்புகள் பதிவாகியுள்ளது.