May 22, 2025 21:41:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு நாளாந்தம் 140 டொன் ஒட்சிஜன் தேவை: சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு நாளாந்தம் 140 டொன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 டொன் ஒட்சிஜனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னர் நாட்டில் நோயாளர்களுக்காக 20 டொன் ஒட்சிஜன் அளவு போதுமானதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.