January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் கேரள கஞ்சா பொதிகளுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது!

மன்னார், தம்பனைக்குளம் பகுதியில் ஒரு தொகை கேரளா கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் பிரதான வீதியூடாக மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றை இடைமறித்து பொலிஸார் சோதனையிட்ட போது, அதிலிருந்து 189 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த லொறியில் இருந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.