January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயற்படுபவர்களை கைது செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று இரவு முதல் யாழில் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்தியாவசிய தேவையுடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரமே வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களை அடையாளம கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.