
கிளிநொச்சி -பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் களப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நைலோன் கயிற்றால் கைகள், கால்கள் கட்டப்பட்டு வலையினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களப்பு பகுதியில் சடலமொன்று மிதப்பது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று காலை கிளிநொச்ச நீதவான் முன்னிலையில் பூநகரி பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டது.
அந்த சடலம் யாருடையது என்று அடையாளம் காண முடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நுவரெலியா பொரலந்த பகுதியில் நீர்த்தாங்கியொன்றில் இருந்து 42 வயது நபரொருவரின் சடமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.