November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை மேலும் மூடி வைப்பதை இலங்கையால் தாங்க முடியாது’

நாட்டை மேலும் மூடி வைப்பதை இலங்கையால் தாங்க முடியாது என்று நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் தொகையில் பாதி பேரைப் பூட்டுவதால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வது கடினம் என்று பதிவிட்டுள்ள அவர், இது நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகத் துறையில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

நாடு பூட்டப்பட்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நாளாந்த இழப்பு ரூ .15 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை போன்ற ஒரு நாட்டை மூடுவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் சிறியதல்ல என்றும், முடக்கத்தைக் குறைக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டார்.