இலங்கையில் மேலும் 212 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொவிட் தொற்று தினசரி உயிரிழப்பு மூன்றாவது நாளாகவும் 200க்கும் அதிகமானதாக பதிவாகியுள்ளது.
109 பெண்களும் 103 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4,596 பேர் இன்று (28) இனங் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21,557ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 57,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 55,394 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே இலங்கை முழுதும் 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 60 வீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.