
twitter/ranil wickremesinghe
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சரியான தீர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடியை கட்டுப்படுத்த சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 720 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் வழங்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜூம் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்ற போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை கூறினார்.