July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கொழும்பில் பரவல் அடைவது 100% டெல்டா மாறுபாடு”; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் ‘சூப்பர் டெல்டா மாறுபாடு’ பரவல் அடைந்து வருவதாக சந்தேகிப்பதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆய்வுகளின் படி, கொழும்பில் பரவல் அடைந்து வருவது 100% டெல்டா மாறுபாடு என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

292 பேரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனைகளில் அவர்கள் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

“டெல்டா” மாறுபாடானது “அல்ஃபா” வகையை விடவும் வேகமாக நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவி வருவதை சோதனை முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகேவின் அறிவுறுத்தல்களின்படி இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

எனினும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி திட்டத்தின் 80% இலக்கை நாடு அடையுமானால், ஓரளவிற்கு வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர் கலாநிதி சந்திம ஜீவந்தர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.