
வெளிநாட்டு பயணிகளுக்கான விசா கட்டணங்களையும் அபராதங்களையும் இலங்கை திருத்தியுள்ளது.
குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் 23 ஆம் பிரிவின் ஒழுங்குவிதிகளை பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருத்தி, புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
விசா காலம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் தங்கியிருப்போருக்கான அபராத தொகை 500 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், மருத்துவ தேவைகளுக்காக வருவோர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மதப் போதகர்கள், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான கட்டணமாக 200 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதாகவும் புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மற்றும் முழுமையான விசா கட்டண மாற்றங்களை கிழே இணைக்கப்பட்டுள்ள வர்த்தமானியில் காணலாம்.