January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுகம சந்தேகநபர் பொலிஸ் தாக்குதலில் மரணித்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணித்த மதுகம சந்தேக நபர், பொலிஸாரின் தாக்குதலில் மரணித்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் வீட்டில் மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினரின் குற்றச்சாட்டை பொலிஸார் மறுத்துள்ளனர்.

மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.