2021 வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கும் படி இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யாத நபர்கள் www.elections.gov.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
அத்தோடு, ஒருவர் 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளராகப் பட்டியலில் தமது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் குறித்த இணையத்தளத்தின் ஊடாக சரிபார்க்க முடியும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஏற்கனவே அதாவது 2020 வாக்காளர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்திருப்பவர்கள், 2021 ஆம் ஆண்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்று பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் எண்ணும் மாதிரிகளை வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் eservices@election.gov.lk என்ற மின் அஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.