January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக முதல்வரின் ஈழத் தமிழர் நலத் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டு

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்கும் நலத்திட்ட நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளாhர்.

தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க ஆலோசித்துள்ள நிரந்தர வதிவிட வசதிகளை ஏற்படுத்துதல், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களுடன் அவர்களின் உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் தாயகத்துக்கு மீளக்குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்கள் ஆக்கபூர்வமானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக தமிழ்நாட்டு சட்ட சபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்துள்ளதோடு, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளமை ஓர் ஆக்கபூர்வமான செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.