January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் 75 வீதமான கைதிகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது’

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 75 வீதமானோருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 20,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 15,000 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கமைய, இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத ஏனைய கைதிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சந்தன ஏக்கநாயக்க கூறினார்.

இதனிடையே, அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.