வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தனக்கு மேற்கொண்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மாதத்திற்குள் ஏற்கனவே 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில்,தற்பொழுது ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.