கொரோனாவினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக வைத்திய நிபுணர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்களும் கொவிட் -19 தொற்றுக்குள்ளாதல், ஒக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளர்கள் உள்ளிட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முனெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தொற்று உச்ச நிலையை அடைந்திருந்த போது, அமுல்படுத்தப்பட்ட முடக்கத்தின் போது சட்டங்கள் எதிர்பார்த்தளவில் நடைமுறைப்படுத்தப்படாமை கவலையளிப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் சங்கம் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.