யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
மேலும் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது.