January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக பி.ஏ. சரத்சந்திர பதவியேற்றார்

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக புத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர இன்று பதவியேற்றுக்கொண்டார்.

வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, பி.ஏ. சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி. திரேஸ்குமார் பதில் அரசாங்க அதிபராக செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில், புத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த பி.ஏ. சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டதுடன், இன்றையதினம் அவர் தனது பதவியினை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு இந்நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.