நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமான போது தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆதரித்தாலும், இந்த அரசாங்கம் செய்யும் அனைத்து பைத்தியக்கார வேலைகளுக்கும் தன்னால் பொறுப்புக்கூற முடியாதென்று இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தது தொடர்பாக சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பதவியை இராஜினாமா செய்யக் கோரி நாமல் ராஜபக்ஷவோ, யோசித ராஜபக்ஷவோ கன்னத்தில் அறையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் பைத்தியகாரத்தனமாக செயற்படுவதாகவும் இராஜ் சாடியுள்ளார்.
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று தான் தொடர்ந்தும் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் தனக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் பல்வேறு போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் இராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இருந்து விலகினாலும், எதிர்கால வேலைத்திட்டங்களில் ஒத்துழைப்பதாக தான் நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும் இராஜ் கூறியுள்ளார்.
பாடகரான இராஜ் தொடர்ந்தும் இசைத் துறையில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.