November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கால் மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக மதுவரித் திணைக்களம், ரயில்வே திணைக்களம்,  இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றுக்கு பாரியளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் மதுவரித் திணைக்களத்துக்கு 6 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மூலம் ஒவ்வொரு வேலை நாட்களிலும் திறைசேரிக்கு குறைந்தபட்சம் 600 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டு வருகின்றது.

இதனிடையே, பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதால் ரயில்வே திணைக்களத்துக்கு சுமார் 100 கோடி ரூபாவும், இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 கோடி ரூபாவும் நட்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனியார் பஸ் தொழில் துறைக்கும் சுமார் 1600 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் என்று பஸ் உரிமையாளர் சங்கங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், மேலும் குத்தகை திருப்பிச் செலுத்தும் சலுகைகளை வழங்குமாறு பஸ் உரிமையாளர் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.