November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றுக்கு உள்ளான 200 சிறுவர்கள் லேடி ரிஜ்வேயில் சிகிச்சைப் பெறுகின்றனர்

இலங்கையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா வகை வைரஸ் சிறுவர்களையும் வயோதிபர்களையும் அதிகம் பதிக்கும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 200 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களில் நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முதல் மற்றொரு விடுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெற்றோர் வீடுகளில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரிப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீடுகளில் புகைபிடிப்பதை நிறுத்துமாறும் வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.