இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டரை கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார்.
கொழும்பு- களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா எனும் வர்த்தகர் இதனை ஆரம்பித்துள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் விகிதம் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை மஞ்சுள பெரேரா களனி, நாஹென்ன பகுதியில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, இவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.