இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தையோ, காதி நீதிமன்ற முறையையோ நீக்க வேண்டாம் எனக் கோரும் கையொப்ப வேட்டை ஒன்றை முஸ்லிம் சிவில் சமூகம் ஆரம்பித்துள்ளது.
முஸ்லிம்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சரிடம் மனுவொன்றை முன்வைக்க முஸ்லிம் சிவில் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
காதி நீதிமன்ற முறையை நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேம்படுத்தும்படி முஸ்லிம் சிவில் அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
காதி நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றங்களை செய்வதற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து சட்ட திருத்தத்துக்கான சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.