அநுராதபுரம் மற்றும் அம்பாறையில் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நெல்லை பதுக்கி வைத்திருந்த 20 நெல் களஞ்சியசாலைகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை சீல் வைத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் இன்று (26) காலை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீல் வைக்கப்பட்ட நெல் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் நெல் பங்குகளை உத்தரவாத விலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
பொலன்னறுவை, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள சட்டவிரோத நெல் களஞ்சியசாலைகளில் நேற்று முதல் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.