November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சிறுவர்களுக்கு ‘விற்றமின் சி’ கொடுக்க வேண்டாம்”; மருத்துவர் நளின் கிதுல்வத்த

பெற்றோர் தமது விருப்பப்படி சிறுவர்களுக்கு விற்றமின்-சி மாத்திரைகள் கொடுப்பது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை ஆலோசகர், மருத்துவ கலாநிதி நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு விற்றமின்-சி மாத்திரைகளை வழங்குவது பொருத்தமானது என்று சமூக ஊடக பதிவுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான மருந்துகள் குறிப்பிட்டுள்ள போதிலும், மருத்துவ ஆலோசனை இல்லாமல் சிறுவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

சிறுவர்களுக்கு தன்னிச்சையாக மருந்து கொடுப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு பெரசிட்டமோல் கொடுக்க முடியும்.

எனினும், காய்ச்சல் அதிகமாக இருந்தால், ஒரு மருத்துவமனைக்கு விரைந்து செல்வது அல்லது மருத்துவரை அணுகுவது மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே கொடுக்கக்கூடிய மருந்துகளை வழங்குவது சிறந்தது என்று வைத்தியர் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.