இலங்கையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கத்தை நீடிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை நாடு தழுவிய முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் போதியளவு காலத்துக்கு கொரோனா தடுப்பு முடக்கம் அமுல்படுத்தப்படவில்லை என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டை மேலும் ஒரு அல்லது இரண்டு வாரங்களுக்கு முடக்கும்படி ரணில் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி நாட்டை முடக்குவதாக இருந்தாலும், மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி முடக்கப்பட்ட காலம் போதுமானதல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு மருத்துவத்துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப முடக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் முடக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.