
கொவிட்-19 வைரஸ் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17ஆம் திகதி இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கொவிட் 19 சூழ்நிலை காரணமாக விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் புரியப்படுவதற்கென சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்ட குறித்த சில வழக்குகளைப் புரிவதற்கு எந்த நிலைமைகள் தொடர்பில் ஆட்கள் இயலாதிருந்தனரோ அந்த நிலைமைகள் தொடர்பிலான தற்காலிக ஏற்பாடுகளைச் செய்வதற்கும், இந்த சூழ்நிலையில் நீதிமன்றம் ஒன்று தொழிற்பட முடியாதிருக்குமிடத்து மாற்று நீதிமன்றங்களைக் குறித்தளிப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
அத்துடன், கொவிட் சூழலைக் கட்டுப்படுத்த வசதியளிப்பதற்கும் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்துவதற்கும், கொவிட் சூழ்நிலைகள் காரணமாக ஒப்பந்தஞ்சார் கடப்பாடுகளை புரிவதற்கும் இயலாதவர்களாகவிருந்த குறித்த சில ஒப்பந்தங்களிற்கான திறந்தவர்கள் தொடர்பில் நிவாரணத்தை அளிப்பதற்கும் மற்றும் அதனோடு தொடர்புபட்ட இடைநேர் வினையான கருமங்களும் இந்தச் சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும்.
இதற்கமைய 2021ஆம் ஆண்டு 17ஆம் இலக்க 2019 கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிகஏற்பாடுகள்) சட்டம் கடந்த 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.