July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்றுக்குள்ளான பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தவில்லை’: ஸ்ரீலங்கன் விமான சேவைகள்

கொரோனா தொற்றுக்குள்ளான பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தவில்லை என்று ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான பணியாளர்கள் மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தமது நற்பெயரைக் கெடுப்பதற்காக சிலர் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டல்களை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை காலத்துக்கு காலம் புதுப்பிப்பதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.