January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைத்தியரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு; ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிறைச்சாலை நீதிமன்றத்தில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை நீதிமன்றத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அங்கிருந்த வைத்தியர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சரின் பரிந்துரைக்கு ஏற்ப சிறைச்சாலை நீதிமன்றம் ஒன்று விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக 10 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக சிறைச்சாலை நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கு சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.