
அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருட்கள் மாத்தறை மற்றும் கந்தர பிரதேசங்களில் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தென் மாகாண நடவடிக்கை பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய குறித்த பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
கல் உடைக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை போன்று பெருமளவு வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களையும், சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.