இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? அல்லது 30 ஆம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது குறித்து நாளைய தினத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதால் ஊரடங்கை மேலும் தொடருமாறு மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.
எனினும் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் கொவிட் தடுப்புச் செயலணி இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.
இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன், நாளைய தினத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.
எவ்வாறயினும் ஊரடங்கு சட்டத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.