இலங்கையின் பல பிரதேசங்களிலும் எதிர்வரும் நாட்களில் கடும் மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இதன்போது 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பாதிவாகலாம் என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய மலைநாட்டிலும் சில பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யும் எனவும் இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், இதன்போது ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.