
(Photo : twitter/@vajirasumeda)
கொரோனா தொற்றுக்குள்ளான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தாம் வைத்தியசாலையில் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டு தமது உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொவிட் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இன்றைய தினம் (26) அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலியான புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
எனினும் பொலிஸ் தலைமையகமும் அவற்றை மறுத்து செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, தாம் உடல் நலத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் செல்பி படமொன்றை வெளியிட்டுள்ளார்.