July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு கொழும்பில் புதிய கட்டுப்பாடுகள்!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே கொழும்பு மாவட்டத்தில் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

ஊரடங்கு அமுலில் உள்ள போது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க கொழும்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய 12,294 நடமாடும் விற்பனையாளர்கள் மற்றும் 1,489 மொத்த விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீகொட, நாரஹேன்பிட்டி, இரத்மலானை மற்றும் போகுந்தர ஆகிய இடங்களில் உள்ள நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி வழங்கும் நோக்கில் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு ஊரடங்கு அமுலில் இருக்கும் போது மக்களுக்கு சேவைகளை வழங்க 2,345 விநியோக வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்ததையடுத்து நாட்டை இரண்டு வார காலத்திற்கு முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது.