இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கான ஒட்சிஜன் தேவை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையே இன்று முற்பகல் கொழும்பில் சுகாதார அமைச்சுஅலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒட்சிஜன் தொகுதிகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது இருவருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நடமாடும் ஒட்சிஜன் தொகுதி தற்போதைய நிலைமையில் மிகவும் அத்தியாவசியமானதொன்று எனவும், ஒட்சிஜன் தேவைப்பாடு தொடர்பில் இந்தியா முன்னுரிமை வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை சில மருந்துப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பிலும் இருவருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.