கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கொழும்பு, புறக்கோட்டை மெனிங் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை காலை 10 மணி முதல் சந்தை மூடப்படும் என்று மெனிங் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை மூடப்படும் மெனிங் சந்தை, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கே மீளத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று முதல் அந்த மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.