
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலை மருத்துவர் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பின்னணியில் அவரது சிறைக்கூட இடமாற்றமும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.