(Photo : Twitter/IRAJ)
இலங்கையின் பிரபல இசைக் கலைஞரான இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் இராஜ் வீரரத்ன அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில், தமது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு தொடர்ந்தும் தன்னால் முடிந்த சேவைகளை செய்ய முன்னிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இசைக் கலைஞரான இராஜ் வீரரத்ன அண்மையில் தமது முகப் புத்தக கணக்கையும் முடக்கியுள்ளார். எனினும் இது குறித்து அவர் எந்த கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.